பிரித்தானியாவை 5 நிமிடங்களில் தாக்கும் ஆபத்தான ஏவுகணை - ரஷ்யா விடுக்கும் எச்சரிக்கை!

Nila
3 years ago
 பிரித்தானியாவை 5 நிமிடங்களில் தாக்கும் ஆபத்தான ஏவுகணை - ரஷ்யா விடுக்கும் எச்சரிக்கை!

லண்டனை ஐந்து நிமிடங்களில் தாக்கக்கூடிய 7,000 மைல் சிர்கோன் ஹைப்பர்சோனிக் அணுசக்தி ஏவுகணையின் புதிய காட்சிகளை ரஷ்யா வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எவ்வாறு மேற்கத்திய நாடுகளில் ஹைப்பர்சோனிக் அணுசக்தித் தாக்குதலை நடத்துவார் என்பதைக் காட்டும் புதிய காணொளி ஒன்றை ரஷ்யா வெளியிட்ட நிலையில் அதில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெக் 9 எனப்படும் தடுத்து நிறுத்த முடியாத ஸிர்கோன் (Zircon) அல்லது சிர்கோன் (Tsirkon) ஏவுகணை வெள்ளைக் கடலில் உள்ள எட்மிரல் கோர்ஷ்கோவ் போர்க்கப்பலில் இருந்து ஏவப்படுவதை காட்டும் வகையில் அந்த காணொளியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பில் ஏதேனும் ஒரு நாடு தலையிட்டால், விளாடிமிர் புடின் அணுஆயுதத்தை பயன்படுத்த தயங்கமாட்டார் என அச்சுறுத்தும் வகையில் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காணொளி, புட்டின் மற்றும் அவரது உயர் அதிகாரிகளின் மறைமுக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வெளிப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த காட்சிகள் இப்போது வெளியிடப்பட்ட நிலையில், இது டிசம்பர் மாதத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக  நம்பப்படுகிறது. மேலும் மேற்கு நாடுகளுக்கு உரிய நேரத்தில் அனுப்புவதற்கு வேண்டுமென்றே தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது.

உக்ரைன் மீது விடயங்களில் சவால் விட்டால் சொல்ல முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா பலமுறை மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!