இன்று முதல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு
#Litro Gas
#Sri Lanka President
#government
Reha
3 years ago

எரிவாயுவை தாங்கிவந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நேற்று மாலை செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இன்று முதல் எரிவாயு விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு தீர்க்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



