சஜித் பிரேமதாசாவினால் ஏற்பாடுசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் ஏற்ப்படுத்திய சேதம் தொடர்பாக விசாரணை ஆரம்பம்.
#Sajith Premadasa
Prasu
3 years ago

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை அடுத்து நேற்றையதினம் பெருந்திரளான மக்களை ஒன்று கூட்டி அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள சக்தியினரால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
இவ்வாறு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பிலான விசேட விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக ஏற்பட்ட அமைதியின்மையினால், சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திற்கு விசேட அறிக்கையொன்றை தாக்கல் செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



