ஆப்பிள் அலுவலகத்தில் மர்ம பார்சல் : உடனடியாக வெளியேற்றப்பட்ட ஊழியர்கள்!
#United_States
Prasu
3 years ago
ஆப்பிள் தலைமை அலுவலகத்தில் மர்மமான பார்சல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக ஊழியர்கள் வெளியேற்ற பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிறுவனம் உள்ளது என்பதும் இந்த வளாகத்தில் இன்று காலை மர்மமான பார்சல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது
இதனை அடுத்து அது வெடிகுண்டாக இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டதால் அலுவலகத்தில் இருந்து உடனடியாக ஊழியர் அனைவரும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர்
அதன் பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்ததில் அதில் அபாயகரமான பார்சல் எதுவும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்தில் வரவழைக்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது