கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்த 100 அடி நீளமுள்ள கார்!!

கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்தவர்களையும், சம்பவங்களையும் பார்த்தால் வியப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும்.
அந்த வரிசையில், உலகின் மிக நீளமான கார் என்ற பெயரை பெற்றிருக்கிறது மியாமியைச் சேர்ந்த கார். 100 அடி நீளமுள்ள இந்த காரில், நீச்சல் குளம், ஹெலிகாப்டரை தரை இறக்க தேவைப்படும் ஹெலிபேட் எல்லாம் இருப்பது இதன் சிறப்பம்சம்.
Equipped with a swimming pool, golf putting green and a helipad.
— Guinness World Records (@GWR) March 10, 2022
1986-ம் ஆண்டு, உலகின் நீளமான கார் என்ற இடத்தில் கின்னஸ் உலக சாதனை புரிந்த இந்த மியாமி கார், தன்னுடைய ரெக்கார்டை முறியடித்து மீண்டும் கின்னஸ் சாதனையில் இடம் பிடித்திருக்கிறது. 'தி அமெரிக்கன் ட்ரீம்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார், முதன் முதலில் 60 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்டது. இப்போது 100 அடி நீளத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1-ம் தேதி, கின்னஸ் அமைப்பால் ஒப்புதல் அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே இடத்தைப் பிடித்திருக்கிறது.
100 அடி நீளமான காரை 26 சக்கரங்கள் கொண்டு இயங்குகிறது. கிட்டத்தட்ட 75 பேர் பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட வேலைபாடுகளின் முடிவில் இந்த கார் தயாராகி இருக்கிறது.



