அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும்:அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 19-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷிய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே நேரத்தில் வடக்கு மற்றும் கீவ் நகரைச்சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர். ரஷிய படைகள், கீவ் நகரை சுற்றிவளைக்க தீவிரம் காட்டுகின்றன.
US President Joe Biden in a tweet announces to provide #Ukraine with weapons against Russia; to allow Ukrainian refugees in the US, and send money, food and other humanitarian aid there. pic.twitter.com/6bxiaIWNda
— ANI (@ANI) March 14, 2022
இந்நிலையில், ரஷியா இடையேயான போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், “ஆக்கிரமிப்பு ரஷிய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம். மேலும் உக்ரேனிய உயிர்களைக் காப்பாற்ற அவர்களுக்கு நிதியுதவி மற்றும் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். அந்நாட்டு அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்போம்”. என்று பதிவிட்டுள்ளார்.



