உக்ரைனின் இந்த இடங்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உக்ரைனின் இப்போதைய வலி அனைவருக்கும் தெரியும். போர்கள், இழப்புகள், வன்முறை நிறைந்த நிலப்பரப்பாக வரலாறு முழுதும் இருந்த இந்த நாடு இப்போது உலகின் மிகப் பெரும் போர்க்களமாகி இருக்கிறது.
பலரும் இந்த நாட்டின் கதை, வரலாற்றைப் புரிந்துகொள்ள முன்வருகிறார்கள். ஆனால், இந்த நாட்டில் இயற்கையும் அழகும், கலைகளும் கொட்டிக் கிடக்கின்றன, இந்த நிலத்தின் நூற்றாண்டு கால வலியையும் அதற்கு சாட்சிகளையும் தாங்கி வருகின்றன. உக்ரைனின் ஐந்து அழகான விஷயங்களைப் பார்க்கலாம்.
வைஷைவங்கா
இந்த நாட்டின் தேசிய உடை இது. கைகளால் பின்னப்பட்ட, பூக்கள் மற்றும் பிற வேலைப்பாடுகள் நிறைந்த உடை இது. அனைவரையும் இணைக்கும் இந்த புள்ளி ஒன்றே இந்த மக்களின் இணக்கத்தைப் பிரதிபலிக்கிறது.
அடியாழ மெட்ரோ
உலகின் ஆழமான மெட்ரோ பாதைகளில் ஒன்று உக்ரைனில் இருக்கிறது. 1960-இல் நவம்பர் ஆறு இந்த மெட்ரோ நிறுத்தம் திறக்கப்பட்டது. க்யிவ் மெட்ரோவின் ஆர்சனல்னா நிலையம் பூமியிலிருந்து 346 அடியாழத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.



