விளாடிமிர் புதினுக்கு எலான் மஸ்க் மீண்டும் விடுத்துள்ள சவால்

Keerthi
3 years ago
விளாடிமிர் புதினுக்கு எலான் மஸ்க் மீண்டும் விடுத்துள்ள சவால்

உக்ரைன் மீது தொடர்ந்து 20-வது நாளாக போர் நடத்தி வரும் ரஷியா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா  படையெடுப்பால் உக்ரைனில் தொலைத்தொடர்பு மற்றும் இணையதளம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் உக்ரைன் விடுத்த கோரிக்கையை ஏற்ற டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்குவதாக அறிவித்தார்.

இதன் பின்னர் நேற்று எலான் மஸ்க் தனது டுவிட்டர் வாயிலாக ரஷ்ய அதிபர் புதினுக்கு சவால் ஒன்றை விடுத்தார்.அதில்," நான் ரஷ்ய அதிபர் புதினிடம் ஒற்றைக்கு ஒற்றை போருக்கு சவால் விடுகிறேன். இந்த சண்டையின் பந்தயம் உக்ரைன். இந்த சண்டைக்கு நீங்கள் தயாரா? என புதின் அவர்களின் டுவிட்டர் கணக்கை குறிப்பிட்டு மஸ்க் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதில் அளித்த  ரஷியாவின் விண்வெளி துறை இயக்குனர் டிமிட்ரி ரோகோசின்,"குட்டிப் பிசாசே, நேரத்தை வீணடிக்காமல் பலவீனமான நீ முதலில் என்னுடன் போட்டியிடு " என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் டிமிட்ரி ரோகோசின் டுவிட்டை குறிப்பிட்டு தற்போது  எலான் மஸ்க் மீண்டும் ஒரு சவால் விடுத்துள்ளார்.

அதில் அதிபர் புதின் கரடி மேல் இருக்கும் புகைப்படத்தையும், எலான் மஸ்க் தான் துப்பாக்கி போன்ற "பிளேம் தி ரோவ்ர்-யை " கையில் வைத்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து ," பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நீங்கள் கடினமான நபர். சரி நீங்கள் 10% கூடுதல் பணம் பெற்று கொள்ளுங்கள். உங்கள் போராளியை தேர்வு செய்து கொள்ளுங்கள். அவர் ( புதின் ) தனது கரடியை கூட கொண்டு போருக்கு அழைத்து வரலாம் " என பதிவிட்டுள்ளார்.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!