உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழப்பு-உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Keerthi
4 years ago
உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழப்பு-உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது ரஷியா இன்று 20-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. ஆனால், உக்ரைன் மீது ரஷியா  தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், உக்ரைன் தலைநகர் கீவ்வில் இன்று இரவு (செவ்வாய்) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கீவ் முழுவதும் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு முழு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். ரஷி ய படைகள் தலைநகர் கீவ்வை நெருங்கி வரும் சூழ்நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில்,  உக்ரைனில் ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை 97 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4