ரஷ்ய பெண் செய்தியாளர் எங்கே? உக்ரைன் தலைநகரில் 35 மணிநேர ஊரடங்கு!

ரஷ்யாவின் அரச தொலைக்காட்சியின் நேரடி செய்தி ஒளிபரப்பின்போது செய்தி வாசிப்பாளருக்கு பின்னால் இருந்து ரஷ்ய நிர்வாகத்துக்கு எதிராக எதிர்ப்பை வெளியிட்ட செய்தியாளர் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்று கைதுசெய்யப்பட்டார். அவரது சட்டத்தரணி காவல்துறை நிலையங்களுக்கு தொடர்பு கொண்டு தேடிய போதும் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.
இந்தநிலையில் ரஷ்யாவில் சில வார்த்தைகளை வெளியிடுவது குற்றவியல் குற்றம் என்ற வகையில் அவர் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் அவர் மொஸ்கோ நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மொஸ்கோவின் உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு எதிராக நேற்று இரவு ரஷ்யாவின் அரச தொலைக்காட்சியில் எதிர்ப்பை வெளியிட்ட பெண் செய்தியாளரின் செயல் போக்கிரிதனம் என்று கிரெம்ளினின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேவையின் ஆசிரியரான மெரினா ஓவ்ஸ்யானிகோவா, செய்தி வாசிப்பாளரின் பின்னால் போர் எதிர்ப்பு சுலோகத்தை வைத்திருந்தார்



