இலங்கையில் நேரடி முதலீடு செய்ய சவுதி அரேபியாவுக்கு அழைப்பு
#SriLanka
#Investment
Mugunthan Mugunthan
3 years ago

இலங்கையில் பல துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ள சவூதி அரேபியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் துறைமுக நகரங்களில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் இருப்பதாக சவூதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சயீத்திடம் ஜனாதிபதி தெரிவித்தார்.



