அரசாங்கத்தை பதவி விலகச் செய்யப்போகின்றோம் - ஹர்சா டி சில்வா

Mayoorikka
3 years ago
அரசாங்கத்தை பதவி விலகச் செய்யப்போகின்றோம் - ஹர்சா டி சில்வா

நாட்டின் கடன்நெருக்கடி மற்றும்அதனுடன் தொடர்புபட்ட ஏனைய பிரச்சினைகளை கையாண்ட விதம் காரணமாக  அரசாங்கம்தனது நியாயபூர்வ தன்மையை இழந்துவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

 நாங்கள் அரசாங்கத்தை பதவி விலகச்செய்யப்போகின்றோம் - இந்த அரசாங்கம் தனது நியாயபூர்வதன்மையை இழந்துவிட்டது என்பதே எனது கருத்து என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன்பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எதனையும் தெரிவிக்காதமைக்காக இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை ஹர்சா டிசில்வா சாடியுள்ளார்.
 
கடந்த மூன்று மாதங்களாக நிதியமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை நிதி நெருக்கடி குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள ஹர்சா டி சில்வா ஜனநாய நாடொன்றில் நாடாளுமன்றத்திலேயே இவ்வாறான விவாதங்கள் இடம்பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மிகவும் பொறுப்புணவற்ற விதத்தில் இந்த நெருக்கடியை கையாள்கின்றது என ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடன் தொடர்ந்தும் தாங்ககூடிய நிலையில் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தற்போதைய உள்நாட்டு நெருக்கடிகள் தீவிரமடையும் நிலையை ஏற்படுத்திய கொள்கைகளை முன்னெடுத்தமைக்காக அரசாங்கத்தின்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.

முதலாவது தேவையற்ற வரிச்சலுகை இரண்டாவது நள்ளிரவில் உரங்கள் மீது விதிக்கப்பட்ட தடை இது பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது என அவர் தெரிவித்துள்ளார்.

2019 இல் அரசாங்கம் அறிவித்த வரிச்சலுகைகள் குறித்தே அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பெருந்தொற்று காலத்தில் வரிவருமானங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சியடைந்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!