வரலாற்றில் முதன்முறையாக இலங்கை ரூபாவுக்கு எதிராக யூரோவின் பெறுமதி அதிகரிப்பு!

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை இன்று பதிவு செய்துள்ளது.
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக யூரோ, டொலர், பவுண்ட்ஸ் உட்பட அனைத்து நாணயங்களின் பெறுமதி அதிகரித்துள்ளது.
இலங்கையின் தனியார் வங்கிகளின் இன்றைய தினம் நாணய மாற்று வீதங்களுக்கு அமைய,
யூரோ ஒன்றின் விற்பனை விலை 304 ரூபாவாகவும், கொள்வனவு விலை 290 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 275 ரூபாவும் கொள்வனவு விலை 265 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின விற்பனை விலை 360 ரூபாவாகவும் கொள்வனவு விலை 345 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 295 ரூபாவாகவும் 281 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 216 ரூபாவாகவும் கொள்வனவு விலை 205 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.



