உலகையே கவலைக்குள்ளாக்கிய ஒற்றைப் புகைப்படம்!

#world_news #Ukraine
Mayoorikka
4 years ago
உலகையே கவலைக்குள்ளாக்கிய  ஒற்றைப் புகைப்படம்!

கர்ப்பிணிப் பெண் ஒருவரை தூக்கி செல்லுதல் போன்ற புகைப்படம், ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போரின் உக்கிரத்தை காட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த புகைப்படும் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த புகைப்படத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண் குறித்து மற்றுமொர அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

உக்ரைனில் மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய குண்டுவீசி தாக்கியதில் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குறித்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனை மீது ரஷ்ய குண்டுவீசி தாக்குதல் நடத்தியதில் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிண பெண், காயமடைந்த நிலையில் குறித்த கர்ப்பிணி மற்றும் அவரது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அன்று ஸ்டெச்சரில் தூக்கிச்செல்லப்பட்ட கர்ப்பிணி, அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் அவரை உயிருடன் வைத்திருக்க பாடுபட்டுள்ளனர். தன் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த அப்பெண், தன்னை உடனே கொல்லும் படி கெஞ்சியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சிசேரியன் மூலம் மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்துள்ளனர், ஆனால் துரதிஷ்டவசமாக சிசு இறந்து பிறந்துள்ளது.

பின் தாயை காப்பாற்ற 30 நிமிடங்களுக்கு மேல் போராடியும், அவரையும் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4