முக்கிய விமான ஆலையை குண்டு போட்டுத் தாக்கி அழித்த ரஷ்யா!
Prabha Praneetha
3 years ago

உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள மிக முக்கிய விமான ஆலையை ரஷ்ய குண்டு போட்டுத் தாக்கி அழித்துள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 19ஆவது நாளாகப் படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவில் உள்ள குடியிருப்புகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, கீவ் நகரின் வடக்கில் உள்ள அன்டோனோவ் விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை மீது ரஷ்யப் படைகள் குண்டு போட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



