கோரிக்கைகளை வென்றெடுக்க சுகாதார ஊழியர்கள் மீண்டும் போராட்டம்
#SriLanka
#Hospital
#Employees
Mugunthan Mugunthan
3 years ago

தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் அதிகாரிகள் தீர்வு காணாத நிலையில் இன்று முதல் தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மேல்மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கு முன்பாகவும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்துவதே முதலாவது செயல்திட்டம் என அதன் இணை அழைப்பாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.



