எரிபொருள் சிக்கல் காரணமாக நீதிமன்றத்திற்கு சைக்கிளில் வந்த வழக்கறிஞர்

#SriLanka #Fuel
எரிபொருள் சிக்கல் காரணமாக நீதிமன்றத்திற்கு சைக்கிளில் வந்த வழக்கறிஞர்

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையில், இன்று (14) காலை எம்பிலிப்பிட்டிய நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஓர் அற்புதமான செய்தி பதிவாகியுள்ளது.

சட்டத்தரணி விஜித புஞ்சிஹேவா தனது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக துவிச்சக்கரவண்டியில் வருகை தந்தமை பரபரப்பாக பேசப்பட்டது.

இதுகுறித்து, சட்டத்தரணி சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவிக்கையில்,

 தான் துவிச்சக்கர வண்டியில் வந்தது அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக அல்ல என்றும், தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப இதுவே தீர்வு கிடைக்கும் என்பதாலேயே எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

"நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. பொதுப் போக்குவரத்தில் ஒரு பொதுவான கொள்கையை உருவாக்க அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். அது அப்போது நடக்கும்."

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!