சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு: லிட்ரோ நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை

#Litro Gas
Mayoorikka
3 years ago
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு: லிட்ரோ நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை

லிட்ரோ நிறுவனமானது  சாதாரண உணவகங்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 12.5 கிலோ நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 850 ரூபாவால் அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளது. 

கடன் கடிதத்தை பெறுவது, கப்பல் கட்டணம் மற்றும் டொலர் பெறுமதி உள்ளிட்ட தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமைகளை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை லிட்ரோ நிறுவனம் அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக சந்தைக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்காத  லிட்ரோ நிறுவனம், கடன் கடிதம் வழங்கப்பட்ட பின்னர் கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்திருந்த நிலையில் நேற்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 48 மணி நேரத்தில் 2 இலட்சம்  எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகித்ததுள்ளது. 

இந்நிலையிலேயே விலை அதிகரிப்புக்கான கோரிக்கையை அந்நிறுவனம் முன் வைத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!