எரிபொருள் மற்றும் எரிவாயுபிரச்சனை: சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசாங்கம்

#Fuel
Mayoorikka
3 years ago
எரிபொருள் மற்றும் எரிவாயுபிரச்சனை: சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசாங்கம்

தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையை முடிவுக்கு கொண்டுவர குறைந்தது இன்னும் ஏழு மாதங்களாகும் என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, உலக அரங்கில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் திணறுகிறது என்று தெரிவித்தார். 

உலகளாவிய பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நாட்டுக்கு டொலர்களை கொண்டு வருவதற்கு தேங்காய்களை  விற்க முடியாது எனவும் டொலர்களை கொண்டு வருவதிலுள்ள சிரமத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

எனவே, சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதியை பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி முயற்சிக்கின்றார்.

தற்போதைய பிரச்சினைகளை சமாளிப்பதற்கு அரசாங்கத்துக்கு குறைந்தது ஏழு முதல் எட்டு மாதங்கள் எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!