வடக்கு மாகாணத்தில் முதலீடு: திட்டம் வகுக்கும் இந்தியா

#India #India Cricket
Mayoorikka
3 years ago
வடக்கு மாகாணத்தில் முதலீடு: திட்டம் வகுக்கும் இந்தியா

வடக்கு மாகணத்தில் இந்திய முதலீடுகளை செய்வதற்கு திட்டங்களை வகுத்து வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

வடக்கு மாகாண மீனவர்களிற்கான வாழ்வாதார உதவித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தபின்னர் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் மீனவர்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக இந்திய முதலீடுகளையும் இங்கு கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.

இதன் மூலம் மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இதற்கு அனைவரது ஒத்துழைப்பு தேவை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்திய அரசாங்கத்தினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது என்றும் இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!