ராஜபக்சக்கள் இந்த நாட்டை லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாகக் கருதுகின்றனர்-ஹிருணிகா

ராஜபக்சக்கள் இந்த நாட்டை லாபம் சம்பாதிக்கும் நிறுவனமாகக் கருதுகின்றனர் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.
மீரிகம தேர்தல் தொகுதியில்நேற்று ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அதிகார சபையை ஸ்தாபிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றால் நாட்டுக்கு இதுவே நடக்கும் என்பதை நாம்ஏற்கனவே தெளிவாகக் கூறியுள்ளோம். சில ஊடகங்கள் இணைந்து இந்த நாட்டை அழித்தன. சஜித்தை ஆட்சிக்குக் கொண்டு வந்து நல்ல நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் விரும்பினோம். ஆனாலும் அறுபத்தொன்பது இலட்சம் பேர் நினைத்ததே நடந்தது.
இன்றைக்கு நாட்டில் உள்ள ஏழைகள் மட்டுமல்ல. எதையாவது செய்யக்கூடியவர்களும் ஆதரவற்றுப் போய்விட்டார்கள் .ஆனாலும் எவ்வளவு காலம் தான் இவ்வாறு திட்டிக்கொண்டே இருப்போம்? இரண்டு முதல் மூன்று மணி நேரம் தொடங்கி ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இன்னும் சில நாட்களில் மின்சாரம் அறவே இல்லாமற் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”
“இன்று நிலவும் இந்த ராஜபக்ச வெறிக்கு முடிவு கட்ட நாம் ஒன்றுபடுவோம். ராஜபக்சக்கள் பெரியவர்கள் அல்ல. நாம் திரண்டு எழுந்தால் ஓடி விடுவார்கள். இத்தனை பேரை வீதியில் இறக்கிவிட்ட அரசு வரலாற்றில் இருந்ததில்லை. இனி மேல் இருக்கப் போவதுமில்லை.”
“ராஜபக்சக்கள் தங்கள் பிள்ளைகள் சாப்பிட வேண்டும் குடிக்க வேண்டும். ராஜபக்சக்கள் இந்த நாட்டை தமது நிறுவனமாக கருதுகின்றனர். அவர்கள் லாபத்தை சேகரித்து தங்கள் நாடுகளுக்கு செல்ல தயாராக உள்ளனர். அவர்களுக்கு இந்த நாடு ஒரு நிறுவனம் என்றாலும், எமக்கு இது நம் நாடு. ஒன்று நாம் இந்த நாட்டில் வாழ வேண்டும். அல்லது இறக்க வேண்டும்.



