கள்ளனோட்டு கொடுத்து பெட்டிக்கடையில் குத்துவிளக்கு வாங்கியவர் கைது.
.jpg)
திட்டக்குடியில் வீட்டில் கள்ள நோட்டு வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த கௌதமி வயது 32. அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 45). இவர்கள் 2 பேரும் இளமங்கலம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு கள்ள நோட்டை மாற்றியுள்ளார்கள்.
கடையில் கூட்டம் இருந்ததால் சரியாக நோட்டை பார்க்காத கடையின் உரிமையாளர் தமிழரசன், பின்னர் அவர்கள் கொடுத்த 500 ரூபாய் நோட்டை பார்த்துள்ளார்.
பின்னர் அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, தமிழரசன் திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் கௌதமி வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டில் வைத்திருந்த 26,500 ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், விசாரணையில் கௌதமிக்கு செந்தில்குமார் என்பவர் கள்ளநோட்டுகளை கொடுத்ததாக தெரிகிறது.
அதனால் கௌதமிக்கு கள்ள நோட்டு கொடுத்த செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்தனர்.



