இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!

#SriLanka
Nila
3 years ago
இலங்கைக்கு செல்லும் பயணிகளுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கை நாட்டில் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக பிரித்தானியா, தமது குடிமக்களுக்கு எச்சரித்துள்ளது.

இலங்கை தொடர்பான தனது பயண ஆலோசனையில், மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை இலங்கையில் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.

இறக்குமதிக்கு செலுத்துவதற்கு தீவிர டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் தற்போது அடிப்படைத் தேவைகளில் பற்றாக்குறை நிலவுகிறது.

அத்தியாவசிய சில்லறைக்கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகளில் மக்கள் நின்கின்றனர். அதிகாரிகள் மின்சாரம் விநியோகத்தடையை விதித்து வருகின்றனர்.

இதேவேளை இலங்கையில் டெங்கு வைரஸ் பரவி வருகிறது. அத்துடன் சமூகத்தில் கொரோனா பரவி வருவதால், குறுகிய அறிவிப்பில் விமானங்கள் மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் பிரித்தானியா தமது குடிமக்களுக்கு பயண அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!