மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர் கைது
Prabha Praneetha
3 years ago

ரம்புக்கனை, ஹெனெபொல பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத் தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
பத்தம்பிட்டிய, ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தம்பதியினருக்கு இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், அவர்களது மகள் தந்தையை கண்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், நீதிமன்ற விசாரணைக்காக வீடு திரும்பிய போதே சந்தேகநபர் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலையுடன் தொடர்புடைய 65 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



