தனியார் பேருந்து உரிமையாளர்களை சந்திக்கிறார் அமைச்சர் !

Prabha Praneetha
3 years ago
தனியார் பேருந்து உரிமையாளர்களை சந்திக்கிறார் அமைச்சர் !

தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணத்தை திருத்துவது அல்லது டீசல் மானியம் வழங்குவது குறித்து கலந்துரையாடப்படும் என அமைச்சர் கூறினார்

எரிபொருள் விலை 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டால், தற்போதுள்ள கட்டணத்தையே தொடர்ந்தும் பேணுவதற்கு பேருந்து உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதால், இது குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

ஆகவே பேருந்து உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய பின்னர் நிதி அமைச்சருடன் இறுதி முடிவு எடுக்கப்படும் போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டார்.

நாளை சாதகமான தீர்மானத்தை வழங்காவிடின் நாளை மறுதினம் முதல் தனியார் பேருந்து சேவை முழுமையாக ஸ்தம்பிதமடையும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!