ஆகஸ்ட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி மக்கள் ஆணையைப் பெற அரசு தீர்மானம்!
#Gotabaya Rajapaksa
#Mahinda Rajapaksa
Prasu
3 years ago

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு அவசர தீர்மானமொன்றை எடுத்துள்ளது என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இவ்வருடத்துக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே அரசு முன்னதாக திட்டமிட்டிருந்தது. இதனால் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டது.
எனினும், மேற்படி முடிவை தற்போது மாற்றியுள்ள அரசு, முதலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராகியுள்ளது.
இவ்வருடம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடருக்கு முன்னர், தேர்தலை நடத்தி மக்கள் ஆணையைப் பெறுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.



