இலங்கையில் நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

#SriLanka #Basil Rajapaksa
Nila
3 years ago
இலங்கையில் நிதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த கட்சியின் பொது செயலாளர்  ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கட்சி மட்டத்தில் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  பொது மக்களுக்கு அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க நிதி அமைச்சர் தவறியுள்ளார்.

இந்நிலையிலேயே, நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கட்சில் உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

எனினும், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!