பாராளுமன்றத்தில் எனது கருத்துக்களை தெரிவிக்க ஆளும் கட்சி அனுமதிக்கவில்லை: கம்மன்பில
Prathees
3 years ago

எரிசக்தி நெருக்கடி தொடர்பான விவாதத்தின் போது கருத்து தெரிவிக்க தமக்கு நேரம் வழங்கப்படவில்லை என முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஆளும் கட்சியின் அமைப்பு அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,
பேச்சாளர் பட்டியல் நிரம்பியிருப்பதால் பேச அனுமதிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.



