வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!
Prabha Praneetha
3 years ago
-1.jpg)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில், நாளை (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 3 நாட்களுக்கு மிதமான மழைப் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனைஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளதுடன், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



