இந்தோனேசியாவில் பாரிய எரிமலை வெடிப்பு: பலர் வெளியேற்றம்!
#Indonesia
Nila
3 years ago

இந்தோனேசியாவின் மெரபி எரிமலை வெடித்து எரிமலைக் குழம்பை கக்க ஆரம்பித்ததை அடுத்து 250க்கும் அதிகமானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
உலகில் இயக்கம் கொண்ட எரிமலைகளில் ஒன்றாக இருக்கும் மெரபி எரிமலை கடந்த புதன்கிழமை இரவு பல தடவைகள் வெடித்ததோடு சாம்பல் புகையை கக்கியது.
இந்த எரிமலையில் இருந்து வீசப்பட்ட பாறைகள் ஐந்து கிலோமீற்றர் தூரம் வரை சென்று விழுந்திருப்பதாக இந்தோனேசிய தேசிய அனர்த்த முகாமை மற்றும் தனிப்பு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
எரிமலையைச் சூழ ஏழு கிலோமீற்றர் சுற்றளவில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடைசியாக 2010 ஆம் ஆண்டு இந்த எரிமலையில் நிகழ்ந்த பாரிய வெடிப்பில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



