உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிடுகிறதா? அமெரிக்கா எச்சரிக்கை!

#Ukraine #Russia #America
Nila
4 years ago
உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிடுகிறதா? அமெரிக்கா எச்சரிக்கை!

உக்ரைனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுத தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆகையால், நாம் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் ஜென் சாகி கூறுகையில், ‘அமெரிக்க உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் மற்றும் உக்ரைனில் ரசாயன ஆயுத மேம்பாடு பற்றிய ரஷ்யாவின் கூற்றுகள் அபத்தமானவை.

இந்த பொய்யான கூற்றுகள், மேற்கொண்டு அவர்கள் நடத்தவிருக்கும் காரணமற்ற தாக்குதல்களை நியாயப்படுத்த கூறும் வெளிப்படையான தந்திரம்’ என கூறினார்.

உயிரியல் ஆயுதங்களை உருவாக்க உக்ரைனிய ஆய்வகங்களுடன் அமெரிக்கா இணைந்து செயற்படுகிறது என்று பல ஆண்டுகளாக ரஷ்யா தனது குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில், கடந்த புதன்கிழமை, ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் சென்ற பெப்ரவரி 24ஆம் திகதிக்கு முன், பிளேக், காலரா, ஆந்த்ராக்ஸ் மற்றும் பிற நோய்க்கிருமிகளின் மாதிரிகளை அழிக்க உக்ரைனிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டதைக் காட்டும் ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக ரஷ்யா கூறியது.

உக்ரைனில் ரஷ்யப் படைகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் பென்டகனால் நிதியளிக்கப்பட்ட இராணுவ உயிரியல் திட்டங்களின் ஆதாரங்களை அழிக்க அவசர முயற்சி என்பதைக் காட்டுவதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4