எதிர்காலத்தில் நாட்டில் எரிவாயு விலை மேலும் உயரும் அபாயம்! - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன
Reha
3 years ago

எதிர்காலத்தில் நாட்டில் எரிவாயு விலை அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (10) அவர் இதனைத் தெரிவித்தார்.
"முன்னூறு ரூபாயாக இருந்த ஒரு மெட்ரிக் டன் எரிவாயு, தற்போது 900 ரூபாயைத் தாண்டியுள்ளது. மூன்று தசாப்தங்களில் உலகின் மிக உயர்ந்த எரிவாயு விலை இன்று".
"தற்போது எரிவாயு விலை உயர்ந்துள்ளது. எதிர்காலத்திலும் எரிவாயு விலை உயரும் போக்கு நிச்சயம் உள்ளது. உண்மையை நாட்டுக்கு சொல்ல வேண்டும். மறைக்க ஒன்றுமில்லை." எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



