பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் இரண்டு மாதங்களின் பின் உயிரிழ்ப்பு!

#world_news
Nila
4 years ago
பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் இரண்டு மாதங்களின் பின் உயிரிழ்ப்பு!

மரபணு மாற்றப்பட்ட பன்றியிலிருந்து இதயத்தைப் பெற்ற நபர் இரண்டு மாதங்களின் பின் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதய நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. 

மனித இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு அவரது உடல் நிலை ஒத்துழைக்காது என்பதால், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்த முடிவானது. 

இதன்படி, கடந்த ஜனவரி மாதம் 7ம் திகதி மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்நிலையில், டேவிட் பென்னட் இரண்டு மாதங்களின் பின் உயிரிழந்துள்ளார்.

அவர் உயிரிழந்தமைக்கான காரணங்கள் வெளியாகவில்லை. எனினும், கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது என்பதை மட்டும் வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4