உக்ரைனுக்கு இண்டர்நெட் கொடுத்த எலான் மஸ்க்கிற்கு ஏற்பட்ட சிக்கல்!

Prasu
4 years ago
உக்ரைனுக்கு இண்டர்நெட் கொடுத்த எலான் மஸ்க்கிற்கு ஏற்பட்ட சிக்கல்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது உக்ரைன் நாட்டில் மின்சாரம், இணையம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் பொதுமக்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர் 

இந்த நிலையில் உக்ரைன் நாட்டிற்கு உதவும் வகையில் தனது ஸ்டார் லிங்க் மூலம் நேரடியாக சாட்டிலைட்டில் இருந்து இணையத்தை கொடுக்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முன்வந்தார்

இதனையடுத்து உக்ரைனில் வெற்றிகரமாக தற்போது இணையதளம் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஷ்யா பிரம்மாண்டமான ஜாம்பர் கருவிகள் மூலம் உக்ரைனில் இணையத்தை தடைசெய்துள்ளது 

இதனால் எலான் மஸ்க்கிற்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஜாம்பர் கருவிகளையும் மீறி உக்ரைன் நாட்டிற்கு எப்படி இணையதளத்தில் கொடுக்கலாம் என்பது குறித்து எலான் மஸ்க்க்கின் ஸ்டார்லிங்க் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4