ரஷ்ய பூனைகளை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள சர்வதேச கூட்டமைப்பு

Keerthi
4 years ago
ரஷ்ய பூனைகளை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள சர்வதேச கூட்டமைப்பு

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலைக் கண்டித்து, பூனைகளுக்கான சர்வதேச கூட்டமைப்பு ரஷ்ய பூனைகளை கொண்டு செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சர்வதேச அளவில் பூனைகளின் நலனுக்காக இந்த கூட்டமைப்பு செயல்படுகிறது. ரஷ்யாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் பூனைகளை, கூட்டமைப்பில் பதிவு செய்யப்படாது என்றும், பூனைகளுக்காக நடத்தப்படும் கண்காட்சியில் ரஷ்யாவின் பூனைகள் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் மார்ச் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனில் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூனைகள் வளர்ப்போருக்கு, கூட்டமைப்பின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4