உக்ரைன்-ரஷ்யா இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று!

Mayoorikka
4 years ago
உக்ரைன்-ரஷ்யா இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் உக்கிர போர் தொடரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று போலந்தின் எல்லையில் இருக்கும் பெலாரஸ்- பிரெஸ்ட் பகுதியில் இடம்பெறவுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தூதுக்குழுவினர் இன்று வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதின் உதவியாளரும் ரஷ்யாவின் தூதுக் குழுவின் தலைவருமான விளாடிமிர் மெடின்ஸ்கி கூறினார்.

உக்ரைன்- ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தொடர்ந்து அங்குள்ள முக்கிய நகரங்களில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

போர் காரணமாக உக்ரைனில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை விரைவில் 10 இலட்சத்தை எட்டும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, உக்ரைன் மீதான ரஷியா படையெடுப்புக்கு கண்டனம் தெரிவித்து ஐ.நா.பொதுச் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ரஷ்யாவும், உக்ரைனும் மத்தியஸ்தம் மற்றும் அமைதியான வழிமுறைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், போரை நிறுத்துவது தொடர்பாக தங்கள் நாடு மீண்டும் பேச்சு வார்த்தைகளை தொடங்க தயாராக இருப்பதாக உக்ரைன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக போரை நிறுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட முதல் சுற்று பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4