ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை : 3ம் உலகப் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்

Nila
4 years ago
ரஷ்யா விடுத்துள்ள எச்சரிக்கை : 3ம் உலகப் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் 7வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்துவதால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டைப் பாதுகாக்க உக்ரைன் படையினர் கடுமையாக போராடி வருகின்றனர். உக்ரைனுக்குள் நுழையும் ரஷிய வீரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துகின்றனர். உக்ரைனுக்குள் நுழைந்த ரஷிய வீரர்களில் இதுவரை 6000 வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உக்ரைனுக்கு நட்பு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது. 

இந்நிலையில், போர் நிலவரம் குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறியதாவது:-

உக்ரைனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, பொருளாதார தடைகளை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக இருந்தது. ஆனால், விளையாட்டு வீரர்கள் மீதான தடையை எதிர்பார்க்கவில்லை.

உக்ரைன் நாடு அணு ஆயுதங்களை வாங்க ரஷியா அனுமதிக்காது. மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும். மூன்றாம் உலகப்போரில் அணு ஆயுதங்களே அதிக பாதிப்பை  ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். உக்ரைன் அணு ஆயுதங்களை வாங்கினால் ரஷியா உண்மையான ஆபத்தை சந்திக்கும் என அவர் கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4