உக்ரைன் காவல்துறை அலுவலகம் மீது ரஷ்ய படைகள் அதிபயங்கர தாக்குதல்!

Reha
3 years ago
உக்ரைன் காவல்துறை அலுவலகம் மீது ரஷ்ய படைகள் அதிபயங்கர தாக்குதல்!

யுக்ரைன் காவல்துறை அலுவலகம் மீது ரஷ்ய படைகள் அதிபயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏழாவது நாளாக தொடரும் யுக்ரைன் – ரஷ்ய போரில் யுக்ரைன் கீவ் நகரிலுள்ள தொலைக்காட்சி சமிக்ஞை கோபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

பீரங்கிகள் மூலம் தரைவழி தாக்குதலையும், ஏவுகணைகள் மூலம் வான் வழித் தாக்குதலையும் ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

அதேபோன்று கார்கிவ் நகரில் யுக்ரைன் காவல்துறை அலுவலகம் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. குறித்த ஏவுகணை தாக்குதலால் நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!