உக்ரைன் ரஷியா போர்: இந்திய மாணவன் பலி

Prathees
4 years ago
உக்ரைன்  ரஷியா  போர்: இந்திய மாணவன் பலி

உக்ரைன்  ரஷியா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீவ் போன்ற நகரங்களில் ரஷியா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களும் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி படையெடுத்துள்ளனர். 

இந்நிலையில், இன்று உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம்  தலைநகர் கீவிலிருந்து உடனடியாக இந்தியர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் கார்கிவ் நகரில் ரஷிய ராணுவத்தினரின் குண்டுவீச்சில் சிக்கி கர்நாடகத்தைச் சேர்ந்த மாணவர் நவீன்  பலியானாதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4