INDvsSL - தலைவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணிக்கு 147 ஓட்டங்கள் வெற்றி இலக்கு
#Srilanka Cricket
Prasu
3 years ago

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி 20 போட்டியில் இந்திய அணிக்கு 147 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்ணை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் அணித் தலைவர் தசுன் சானக ஆட்மிழக்காது 74 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் அவீஸ் கான் இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.



