ரஷிய தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் வெளியிட்ட கருத்து

Keerthi
4 years ago
ரஷிய தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் வெளியிட்ட கருத்து

உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். 

ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷிய தாக்குதல் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், நிலைமையை சரியாக கையாண்டிருந்தால் உக்ரைனில் தற்போது உள்ள சூழ்நிலை ஒருபோதும் வந்திருக்காது. எனக்கு விளாடிமிர் புதினை (ரஷிய அதிபர்) நன்றக தெரியும். அவர் தற்போது செய்யும் செயலை (உக்ரைன் மீதான தாக்குதல்) டிரம்ப் அரசாங்கம் (டிரம்ப் அதிபராக) இருந்திருந்தால் நிச்சயம் செய்திருக்கமாட்டார். 

ஆனால், தற்போது போர் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. புதின் தனக்கு என்ன வேண்டுமோ அதை தற்போது பெறுவது மட்டுமின்றி கச்சா எண்ணெய் விலை உயர்வதால் மேலும் பணக்காரராகிக்கொண்டிருக்கிறார்’ என்றார்.  

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4