மிஸ் அலபாமா பட்டம் வென்ற மாடல் அழகி கார் விபத்தில் மரணம்

Keerthi
4 years ago
மிஸ் அலபாமா பட்டம் வென்ற மாடல் அழகி கார் விபத்தில் மரணம்

அமெரிக்காவின் மாகாணங்களில் அலபாமாவும் ஒன்று. இந்த மாகாணத்தின் பெயரில் ‘மிஸ் அலபாமா பார் அமெரிக்கா ஸ்டாங்’ என்ற பெயரில் அழகி பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. கணவர் இன்றி அல்லது தனியாக வாழ்ந்து வரும் பெண்களுக்காக நடத்தப்படும் இந்த அழகி போட்டியில் கடந்த ஆண்டு ஷொஇ சோஹொ பெத்தெல் (27 வயது) வெற்றிபெற்றார். இதன் மூலம் பெத்தெல் ‘மிஸ் அலபாமா’ என்ற அழகி பட்டத்தை வென்றார்.

இதற்கிடையில், பெத்தெல் கடந்த 10-ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். மியாமி நகரில் நடந்த இந்த விபத்தில் பெத்தெலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, பெத்தெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக பெத்தெல் கோமா நிலைக்கு சென்றார்.

இந்நிலையில், கோமா நிலைக்கு சென்ற பெத்தெல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கடந்த 18-ம் தேதி உயிரிழந்ததாக பெத்தெலின் குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர். மிஸ் அலபாமா பட்டம் வென்ற பெத்தெல் உயிரிழந்த நிகழ்வு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெத்தெல் விபத்தில் சிக்கியது எப்படி? கார் விபத்துக்கான காரணம் என்ன? விபத்தை ஏற்படுத்தியது யார்? உள்பட அனைத்து கேள்விகளுக்கும் பெத்தெல் குடும்பத்தினர் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4