ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிட வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Keerthi
4 years ago
ஊரடங்கு கட்டுப்பாடுகளை கைவிட வேண்டாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலக அளவில் ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்தாலும் இதனால் பலி எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளதால் பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு வைரஸ் தாக்கம் இன்னும் முழுவதுமாக உலகை விட்டு நீங்கவில்லை. எனவே உலக நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானிகள் கூறுகையில், உலகிலுள்ள 193 நாடுகளில் சில நாடுகள் வைரஸ் தாக்கம் முழுமையாக நீங்கி விட்டதாக நினைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி விடுகின்றன. அதன்பின் திடீரென வைரஸ் தாக்கம் அதிகரித்ததை அடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துகின்றன.

இதற்கு நேர் மாறாக சில நாடுகள் வைரஸ் தாக்கத்தின் அளவை பொருத்து படிப்படியாகவே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. இந்த முறை தான் சரியானது என தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4