மீண்டும் கொரோனா வலையில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் சார்ள்ஸ்

Prasu
4 years ago
மீண்டும் கொரோனா வலையில் சிக்கிய பிரிட்டன்  இளவரசர் சார்ள்ஸ்

பிரிட்டன் இளவரசா் சாா்லஸுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இளவரசா் சாா்லஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனால் அவா் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 வயதாகும் சாா்லஸ், அரசி எலிசபெத்துக்கு அடுத்தபடியாக பிரட்டன் அரசராகப் பொறுப்பேற்கும் நிலையில் உள்ளாா். ஏற்கெனவே அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4