உக்ரையினும் ரஸ்யாவும் மோத ஆயத்தமா? பதற்றத்தில் மக்கள். பாவம் பாக்காத இரு நாடுகள்

Keerthi
4 years ago
உக்ரையினும் ரஸ்யாவும் மோத ஆயத்தமா? பதற்றத்தில் மக்கள். பாவம் பாக்காத இரு நாடுகள்

உக்ரைன், ரஷ்யா இடையே நீடிக்கும் பதற்றம் காரணமாக அடுத்த சில நாட்கள்  கண்ணிமை பொழுது என்று பிரித்தானிய போரிஸ் ஜோன்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் எல்லையில் இருந்து தனது படைகளை மீள அழைக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதிக்கு போரிஸ் ஜோன்சன் அழைப்பு விடுத்துள்ளார்.

உக்ரைன் மீதான நேட்டோ நட்பு நாடுகளுக்கான ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பிரஸ்ஸல்ஸ் மற்றும் போலந்திற்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் விஜயம் செய்துள்ளார்.

போலந்து பிரதமர் Mateusz Morawiecki உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு வார்சாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போரிஸ் ஜோன்சன், பிரித்தானியா நேட்டோ நட்பு நாடுகளுடன் தோளோடு தோள் நிற்கிறது என தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்கள் மிகவும் ஆபத்தான தருணம்

ரஷ்யா மீதான பிரித்தானிய உளவுத்துறை "கடுமையாக உள்ளது" என்றும், உக்ரைன் எல்லையில் பெரும் எண்ணிக்கையில்" ரஷ்ய துருப்புக்கள் குவிந்திருப்பதாகவும் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

"பல தசாப்தங்களாக மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஐரோப்பாவிற்கு அடுத்த சில நாட்களில் இது மிகவும் ஆபத்தான தருணம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் இடையிலான எல்லைப் பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு, உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது.

சோவியத் யூனியனில் அங்கம் வைத்த உக்ரைன் நாட்டில், மக்கள் பேசும் மொழி, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறை உள்ளிட்டவை ரஷ்யாவை ஒத்துப் போகும். ஆனால், எல்லை பிரச்னை காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாடு ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவும் தனது ஆதரவை அளித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை சிறிது சிறிதாக குவித்து வருகிறது.

இதுதொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவைக் கேட்டுக்கொண்ட போதிலும், ரஷ்யா படைக்குவிப்பை நிறுத்தவில்லை.
உலகில் கொரோனாவால் மக்கள் துன்புறும் இவ்வேளையில் இது இவர்களுக்கு தேவையா என பல அமைதியை விரும்பும் நாடுகள் கேள்வியெழுப்பியிருக்கின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4