அடுத்த வைரஸ் திரிபு அபாயகரமானது எச்சரிக்கையுடன் இருக்க உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்.!

Keerthi
3 years ago
அடுத்த வைரஸ் திரிபு அபாயகரமானது எச்சரிக்கையுடன் இருக்க உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்.!

அடுத்தடுத்து வரக்கூடிய கொரோனா வைரஸ் திரிபுகளின் தொற்றும் தன்மை தீவிரமாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இன்னும் சில காலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் மக்கள் கடைபிடிக்க வேண்டி இருப்பதாக
உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒமைக்ரான் வைரஸை தொடர்ந்து மேலும் சில திரிபுகள் மக்களைத் தாக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள அவர், அவை ஒமைக்ரானைவிட தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும் அதற்குப் பிறகும் சில திரிபுகள் உருவாகக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்றின் ஆபத்தையும் உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!