உலகளவில் இதுவரை 40.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

Keerthi
4 years ago
உலகளவில் இதுவரை 40.03 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 கோடியே 03 லட்சத்து 20 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 7 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 414 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 89 ஆயிரத்து 900 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 32 கோடியே 06 லட்சத்து 03 ஆயிரத்து 357 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 57 லட்சத்து 81 ஆயிரத்து 520 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4