இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 57,623 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Keerthi
4 years ago
இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 57,623 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரேநாளில் புதிதாக 57,623 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,78,66,632 ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 58 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 80 ஆயிரத்து 473 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 23,27,796 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4