நான்கு நாட்களாக ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி தவித்த சிறுவன். ஊரே கூடி காப்பாற்ற முயன்ற சம்பவம். புகைப்படங்கள் இணைப்பு.

Keerthi
4 years ago
நான்கு நாட்களாக ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கி தவித்த சிறுவன். ஊரே கூடி காப்பாற்ற முயன்ற சம்பவம். புகைப்படங்கள் இணைப்பு.

மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற கிட்டத்தட்ட 4 நாட்களாக மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்கா நாடான மொராக்கோவில் Chefchaouen மாநிலத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

Rayan என்று அடையாளப்படுத்தப்பட்ட 5 வயதே ஆகும் அந்த சிறுவன், கடத்த செவ்வாக்கிழமை மாலை 100 அடி (30 மீட்டர்) ஆழமுள்ள ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான்.

குழந்தை அழும் குரல் கேட்டதையடுத்து, கிணற்றுக்குள் சிறுவன் விழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த மொராக்கோ மீட்புக் குழுவினர் புதன், வியாழன் என 48 மணிநேரங்களுக்கும் மேலாக சிறுவனை செங்குத்தாக மீட்க முயற்சித்தனர்.

கிணறு 32 மீட்டர் ஆழம் கொண்டது மற்றும் மேலே 45cm (18 அங்குலம்) விட்டத்தில் இருக்கும் அந்த கிணறு கீழே இறங்க இறங்க சுருங்கியுள்ளதாகவும், அதன் காரணமாக குழந்தையை மீட்க மீட்பவர்கள் கீழே செல்ல முடியாது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததால், இன்று கிணற்றின் பக்கவாட்டில் பிரம்மாண்ட இயந்திரங்களைக் கொண்டு, நேராக சிறுவன் இருக்கும் தூரம் வரை பாரிய பள்ளத்தை தோண்டி வருகின்றனர்.

தற்போதைய நிலையில், பக்கவாட்டில் கிணறு தோன்றும் திட்டத்தின்படி, கிட்டத்தட்ட சிறுவனை நெருங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் ஜெண்டர்மேரியில் இருந்து ஒரு மருத்துவ ஹெலிகாப்டர் மற்றும் சுகாதார அமைச்சின் மறுமலர்ச்சியில் நிபுணர்களான மருத்துவ ஊழியர்கள் குழந்தை வெளியே இழுக்கப்படும் போது சம்பவ இடத்தில் தயார் நிலையில் உள்ளனர்.

ஐந்து புல்டோசர்கள் சம்பவ இடத்தில் தோண்டி வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சிறுவன் உயிருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பத்திரமாக இருப்பதாக கூறியுள்ளனர்.

மேலும், கிணற்றுக்குள் கமெரா அனுப்பப்பட்டு கண்காணிக்கப்பட்டுவரும் நிலையில், சில புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரிகள் கிணற்றுக்கு உணவு மற்றும் தண்ணீரை அனுப்பியதாகவும், தனது மகன் சிறிது தண்ணீர் குடிப்பதை மேலிருந்து வீடியோவில் கண்டதாகவும் சிறுவனின் தந்தை கூறியுள்ளார். 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4