அதிக ஆபத்துள்ள பட்டியலான சிகப்புப் பட்டியலில் இருந்து நீக்கப்படும் 32 நாடுகளின் விபரங்கள் உள்ளே.

Keerthi
4 years ago
அதிக ஆபத்துள்ள பட்டியலான சிகப்புப் பட்டியலில்  இருந்து நீக்கப்படும் 32 நாடுகளின் விபரங்கள் உள்ளே.

ஜேர்மனியின் 'அதிக ஆபத்துள்ள நாடுகள்' பட்டியலில் மேலும் மூன்று நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான ரோபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் (RKI) நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய புதுப்பிப்பின் படி, பிப்ரவரி 6 முதல் அதிக ஆபத்துள்ள நாடுகளின் (High-Risk Areas) பட்டியலில் ஆர்மீனியா, அஜர்பைஜான், பாலஸ்தீனிய பிரதேசங்கள் ஆகிய மூன்று நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதனால், இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கடுமையான நுழைவு விதிகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மறுபுறம், பிப்ரவரி 6 முதல், 32 நாடுகள் இனி அதிக ஆபத்துள்ள பட்டியலில் ஒரு பகுதியாக இருக்காது என்று ஜேர்மன் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அதிக ஆபத்துள்ள பட்டியலில் இருந்து நீக்கப்படும் 32 நாடுகள் பின்வருமாறு:

  1. எக்குவடோரியல் கினியா
  2. எத்தியோப்பியா
  3. பெனின்
  4. போட்ஸ்வானா
  5. புர்கினா பாசோ
  6. கேப் வெர்டே
  7. ஐவரி கோஸ்ட்
  8. ஜிபூட்டி
  9. எரித்திரியா
  10. காபோன்
  11. காம்பியா
  12. கானா
  13. கினியா
  14. கினியா பிசாவ்
  15. கேமரூன்
  16. கொமரோஸ்
  17. லைபீரியா
  18. மாலி
  19. மொரிட்டானியா
  20. மொசாம்பிக்
  21. நைஜர்
  22. நைஜீரியா
  23. காங்கோ குடியரசு
  24. சாவோ டோம் மற்றும் பிரின்சிபி
  25. செனகல்
  26. சியரா லியோன்
  27. சோமாலியா
  28. சூடான்
  29. தெற்கு சூடான்
  30. டோகோ
  31. சாட்
  32. மத்திய ஆப்பிரிக்க குடியரசு 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4